Crime, law and justice
சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் திருக்காலிமேடில் விபத்து அபாயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - திருக்காலிமேடு பிரதான சாலையை மறித்து நிற்கும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் மாடுகள் வளர்ப்போர், தங்களது மாடுகளை வீட்டில் கட்டி வைத்து பராமரிக்காமல் மேய்ச்சலுக்கு அவித்து விட்டு விடுகின்றனர்.
இந்த மாடுகள் திருக்காலிமேடு பிரதான சாலை, ஆனந்தாபேட்டை, ரெட்டிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிகின்றன.
இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், மாடுகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள், திருக்காலிமேடு பிரதான சாலைகளில், காலை மற்றும் மாலை நேரங்களில் ஆய்வு செய்து, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, மாட்டு தொழுவத்தில் ஒப்படைப்பதோடு, மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.