Politics
வாசகர்களின் கேள்விகளுக்கு அந்துமணியின் அசத்தலான பதில்கள்
எஸ்.ராமானுஜன், பெங்களூரு:பல்லடத்தை சேர்ந்த இளம் பொறியியல் பட்டதாரிப் பெண் செண்பகம்,

பல்லடத்தை சேர்ந்த இளம் பொறியியல் பட்டதாரிப் பெண் செண்பகம்,
துவக்கக் கல்வி முதல், பொறியியல் பட்டம் வரை, தமிழ் வழியில் பயின்று,
தன் சொந்த மாவட்டமான திருப்பூரிலேயே நீர்வளத் துறையில் உதவி பொறியாளராக பொறுப்பேற்கிறாரே?
செண்பகம் மேலும் மேலும் முன்னேறி, பல வெற்றிகளை பெற வாழ்த்துவோம். நல்ல அறிவாளியான அவர், மற்ற மொழிகளையும் கற்றால், அவரது மாவட்டத்தில் மட்டுமில்லாமல், இந்திய அளவில் சாதனை புரியலாமே!
'திடீரென தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்த்து, அவர்களுக்கு அதிக இடம் கொடுத்தது, கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகளுக்கு ஏமாற்றமாகி விட்டது' என்கிறாரே, வி.சி., கட்சி திருமாவளவன்?
சட்டசபை தேர்தல் நேரத்தில், த.வெ.க.,வின் அசுர எழுச்சியைப்
பார்த்து பயந்து, 'எதைத் தின்றால் பித்தம் தெளியும்...' என்ற தவிப்பில், தி.மு.க., செய்த பல தவறுகளில் இதுவும் ஒன்று. அதனால் தான் மிகப் பெரிய தோல்வி ஏற்பட்டது. தி.மு.க.,வில் சிலர் இன்னும் யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், வாய்ச் சவடால் விடுகின்றனர்; அவர்களை ஸ்டாலின் அடக்கவில்லை என்றால், தி.மு.க., மீண்டு எழுவது கடினமே!
'மொபைல் போன் பார்க்க நேரம் இருக்கு; 'பைல்' பார்க்க நேரம் இல்லையா?' என, அரசு அதிகாரிக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'டோஸ்'
விட்டிருக்கிறாரே?
சரியான சாட்டையடி. நம் மாநிலத்திலும், பல துறையினருக்கும் இது போன்ற
சாட்டையடி தேவைப்படுகிறது!
'ராகுல் தான், பிரதமர் வேட்பாளர்'
என, மாணிக்கம் தாகூர் அடித்துச் சொல்கிறாரே?
நீண்ட கால போராட்டத்திற்குப் பின், தாகூருக்கு தற்போது தான், மாநில தலைவர் பதவி கிடைத்திருக்கிறது; அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டாமா... 'ஜிங்சாக்' அடித்து தானே ஆக வேண்டும்!
தமிழகத்திற்கு மூன்று ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளதால், தென் மாவட்டங்களின் வளர்ச்சி வேகமெடுக்குமா?
பாதுகாப்பாக பயணிக்க உதவும்; மேலும் வர்த்தகமும் மேம்படும்.
ஜனாதிபதியின் தனிப்பட்ட உதவியாளராக பதவி வகிக்கும், முதல் ராணுவப் பெண் அதிகாரியாக பொறுப்பேற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ள, மேஜர் நவ்யா ெஷகாவத் குறித்து...
ஜனாதிபதிக்கான பாதுகாப்பு நடைமுறைகள், சாதாரணமானதல்ல. உளவுத் துறையுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டிய, மிக உயரிய பொறுப்பு. அதுவும் பெண் ஜனாதிபதியை பாதுகாக்கும், மேஜர் நவ்யா ெஷகாவத்துக்கு, 'ராயல் சல்யூட்' அடிப்போம்!