Sport
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: செப்.,14ல் காலிறுதி
திண்டுக்கல், செப்.10 தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையே 23 வயதிற்கு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையே 23 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி நடந்து வருகிறது.
முன் காலிறுதி போட்டியில் திண்டுக்கல் அணி 36 ஓவர்களில் 123 ரன்கள் (பைராஜன் 33, ஹரிஸ் ஆதித்யா 6 விக்கெட்டுகள்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய செங்கல்பட்டு அணி 34 ஓவர்களில் 121 ரன்கள் (சுவாமிநாதன் 36, லக் ஷ்மண் ராகுல் 5 விக்கெட்டுகள்) எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
திண்டுக்கல் அணி காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் செப்.,14ல் ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானத்தில் நடக்கும் போட்டியில் தென்காசி அணியுடன் விளையாட உள்ளது.