Lifestyle and human interest
தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மாற்றுத்திறனாளிகள் 300 பேர் கைது

சேலம்: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனா-ளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் சார்பில், உதவித்தொகை உயர்த்தி வழங்காததை கண்டித்து, சேலம் நாட்டாண்மை கழக கட்டட அலுவலகம் முன், 300க்கும் மேற்பட்ட மாற்றுத்-திறனாளிகள் திரண்டனர்.
அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக வந்து, கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு முற்றுகை-யிட முயன்றபோது போலீசார் தடுத்து
நிறுத்தினர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வாக்குறுதியை நிறைவேற்றாத த.வெ.க., அரசை கண்டித்து, பல்வேறு கோஷங்-களை எழுப்பினர். பாதுகாப்பில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைய-டுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனா-ளிகள், 300 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து சங்க மாவட்ட செயலாளர் குணசே-கரன் கூறியதாவது:
ஆந்திராவில், 6,000 முதல், 15 ஆயிரம் ரூபாய் வரையும், புதுச்சேரியில், 3,500 ரூபாய், தெலுங்-கானாவில், 4,000 ரூபாய் உதவித்தொகை வழங்-கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த, 4 ஆண்டுகளாக உதவித்தொகை உயர்த்தப்படவில்லை, த.வெ.க., அரசு தேர்தல் வாக்குறுதியாக மாற்றுத்திறனாளி-களுக்கு உதவித்தொகையாக, 3,000 ரூபாய் வழங்-கப்படும் என அறிவித்து இருந்தனர். ஆனால், இதுவரை தேர்தல் வாக்குறுதி குறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் எந்தவித அறிவிப்பும் இல்லை.
எம்.எல்.ஏ.,க்களுக்கு கார் வழங்குவதற்கும், புதிய சட்டசபை கட்டடம் கட்டுவதற்கும் நிதியை ஒதுக்குகின்றனர். ஆனால் அவதிப்பட்டு வரும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்குவதற்கு, த.வெ.க.,அரசிடம் நிதி இல்லை என கூறி வருவது ஏமாற்றத்தையும் வேதனையும் அளிக்கிறது. எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்த கட்டமாக சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்தப்-படும்.
இவ்வாறு கூறினார்.