Lifestyle and human interest
முற்றுகை போராட்டம்

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் உதவித் தொகையை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட முயன்ற 58 பெண்கள் உள்பட 142 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் உதவித் தொகையை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடந்தது.