Arts, culture, entertainment and media
காங்கேயம் தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்தநாள்
காங்கேயம்:தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு, காங்கேயம் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், கட்சி அலுவலகத்தில் செயலாளர் சிவானந்தன் தலைமையில், அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கேயம் நகர தி.மு.க., சார்பில் நகர செயலாளர் சேமலையப்பன் தலைமையில் அண்ணாதுரை போட்டோவுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.