Economy, business and finance
கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை சரிவு
கோயம்பேடு:விநாயகர் சதுர்த்தி பண்டிகை முடிந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை சரிந்தது.
கோயம்பேடு சந்தைக்கு, ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஊட்டி, திண்டுக்கல், ஆந்திரா, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து, பூக்கள் விற்பனைக்கு வருகின்றன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் விலை, மும்மடங்காக உயர்ந்தது. பண்டிகை முடிந்த நிலையில், நேற்று பூக்கள் விலை சரிந்தது.
ஆனால், சாமந்தி பூ வரத்து குறைவாக இருந்ததால், நேற்று முன்தினமும் நேற்றும் சாமந்தி பூ மட்டும், ஒரு கிலோ 200 - 250 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்றைய நிலவரப்படி, பன்னீர் ரோஸ் 160; சாக்லேட் ரோஸ் - 200; முல்லை -360 - 400; மல்லிகை 600 - 700 ரூபாய்க்கு விற்பனையானது.
மேலும், கோயம்பேடு பூ சந்தையில், விநாயகர் சதுர்த்திக்கு பின் விற்பனையின்றி தேங்கிய சாமந்தி பூ, குப்பையில் கொட்டப்பட்டன.