நடுரோட்டில் ஜெனரேட்டர் வாகன ஓட்டிகள் சிரமம்
திருப்புவனம், செப். 11- திருப்புவனம் புதுாரில் நேற்று மின் தடை என்பதால் வங்கி நிர்வாகம் நடுரோட்டில்
திருப்புவனம் புதுாரில் நேற்று மின் தடை என்பதால் வங்கி நிர்வாகம் நடுரோட்டில் ஜெனரேட்டரை வைத்து பயன்படுத்தியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
மதுரையில் இருந்து திருப்புவனம் வழியாக திருப்பாச்சேத்தி, கமுதி, பரமக்குடி, இளையான்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஆக்கிரமிப்பு காரணமாக ரோடு சுருங்கி விட்டது. வேலை நாட்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எதிர் எதிரே வாகனங்கள் வந்தால் விலக கூட முடிவதில்லை. அடிக்கடி விபத்துக்களும் நேரிட்டு வருகின்றன. போக்குவரத்து போலீசார் இருந்தும் நெரிசலை தவிர்க்க முடியவில்லை.
இந்நிலையில் நேற்று திருப்புவனத்தில் மின்தடை அறிவிக்கப்பட்டது. திருப்புவனம் புதுாரில் செயல்பட்டு வரும் வங்கியில் ஜெனரேட்டர் வசதி இல்லாததால் வாடகைக்கு ஜெனரேட்டரை வாங்கி பயன்படுத்தினர். ஜெனரேட்டரை ரோட்டிலேயே நிறுத்தி இருந்ததால் வாகனங்கள் சென்று வர முடியவில்லை.திருப்புவனம் புதுார் பஸ் நிறுத்தம் அருகே ஜெனரேட்டர் வைக்கப்பட்டதால் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கவும் முடியவில்லை.
வரும் காலங்களில் ரோட்டில் ஜெனரேட்டர் வைத்து இயக்குவதை போலீசார் தடுக்க வேண்டும்.