Religion
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிேஷகத்திற்கு 45 கட்டுப்பாட்டு அறைகள்: 10 துறைகளை இணைத்து கண்காணிக்கும் பணிகள் தீவிரம்

மதுரை: மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிேஷக பணிக்காக மாநகராட்சி உட்பட 10 துறைகளை இணைத்து கண்காணிக்க 45 கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோயிலை சுற்றி சுகாதார மேம்பாடு, ரோடு சீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இக்கோயில் கும்பாபி ேஷகம் செப்.,17 ல் நடக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பர் என்பதால் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சி செய்து வருகிறது. வருவாய், மாநகராட்சி, போலீஸ், தீயணைப்பு, சுகாதாரம், மின்வாரியம் உட்பட 10 துறைகளின் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றும் வகையில் மாநகராட்சி சார்பில் கோயில் பகுதியில் 45 கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக சித்திரை வீதி முதல் மாசி வீதி வரை மாநகராட்சி சார்பில் செப்.,18 வரை சுழற்சி முறையில் பணியாற்ற 30 ஏ.இ., ஜே.இ.,க்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 43 இடங்களில் 24 மணிநேரமும் செயல்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் வைக்கவும், அதை கண்காணித்து, பராமரிக்க 25க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளன. மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி நகர்நலப் பிரிவு சார்பில், 24 சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபி ேஷகத்திற்கு 15 லட்சம் பக்தர்கள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்திரைத் திருவிழாவுக்கு இணையாக அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 60க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக கழிப்பறை வசதி ஏற்படுத்தி பராமரிக்க, மருத்துவ முகாம்கள் அமைக்கவும், போதிய பணியாளர்கள் நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலை சுற்றி அனைத்து ரோடுகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது என்றார்.