Economy, business and finance
வீடு புகுந்து 20 சவரன் நகை ரூ.1 லட்சம் கொள்ளை :மூங்கில்துறைப்பட்டு அருகே துணிகரம்
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த சீர்பாதநல்லுாரில் பூட்டிய வீட்டின் கதவைத் திறந்து 20 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த சீற்பாதநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் தண்டபாணி, 44; இவர், காலை வீட்டின் கதவைப் பூட்டி விட்டு 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் நடைபெறும் ஏரி வேலைக்குச் சென்றிருந்தனர்.
மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 20 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மூங்கில்துறைப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் அம்பிகா மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.