Economy, business and finance
5.5 பவுன், ரூ.1 லட்சம் திருடியவர் சிக்கினார்
சேலம்: சேலம், அஸ்தம்பட்டி சின்னபுதுாரை சேர்ந்த, சரவணன் மனைவி ஷீலா, 42. தனியார் கல்லுாரியில் காசாளராக பணிபுரி-கிறார். இவர் கடந்த, 28ல் கல்லுாரி சென்று விட்டு வீடு திரும்பிய போது, பூட்டு உடைக்கப்பட்டு, 5.5 பவுன் நகை, 1 லட்சம் ரூபாய் திருடுபோனது தெரிந்தது.
அவர் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசா-ரித்தனர். இந்நிலையில் நேற்று, மெய்யனுார், ஆலமரத்துக்காடை சேர்ந்த பிரதீப், 42, என்பவரை கைது செய்து, அவரிடம், 5.5 பவுன் நகையை மீட்டனர்.