Lifestyle and human interest
கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

ஈரோடு; சட்டசபை கூட்டத்தொடரில், மாற்றுத்திறனாளி-களுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி, ஈரோடு கலெக்டர் அலு-வலகத்தை, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக-ளுக்கான சங்கத்தினர், நேற்று முற்றுகையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஆந்திரா, கர்-நாடகா மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்-கான உதவித்தொகை அதிகம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில், 1,500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.
இதை, 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். கோரிக்கையை நிறைவேற்ற தவ-றினால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்-படும். இவ்வாறு கூறினர்.
முற்றுகையில், 86 பெண்கள் உள்ளிட்ட, 186 பேர் பங்கேற்றனர். அனைவரும் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
