Politics
ரூ.3 கோடி மோசடி த.வெ.க., நிர்வாகி மீது புகார்
சேலம்: சேலம், சன்னியாசிகுண்டை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி சுரேஷ், 40. இவர் உட்பட, 30க்கும் மேற்பட்டோர், சேலம் போலீஸ், துணை கமிஷனர் கீதாவிடம் நேற்று அளித்த புகார் மனு:
சேலம், எருமாபாளையத்தை சேர்ந்த த.வெ.க., பெண் நிர்வாகி, 'பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும். ஒரு லட்சம் கட்டினால் ஓராண்டில், 2.50 லட்சம் ரூபாய் கிடைக்கும்' என்று கூறியதை நம்பி, பலரும் முதலீடு செய்தோம். 2024 முதல், 2026 வரை நுாற்றுக்கும் மேற்பட்டோரிடம், 3 கோடி ரூபாய் வரை அவர் பெற்றிருக்கலாம் என, தெரிகிறது.
இதுகுறித்து, அவரிடம் கேட்டபோது, 'நீங்கள் போட்ட பிட்காயின் முதலீடு காலம் முடிந்து விட்டது. இனி பணம் வராது. உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்' என, கூறினார். பணம் மோசடி செய்த பெண் நிர்வாகி மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தனர்.
இந்த புகார் மீது விசாரணை நடத்த போலீசாருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.