Politics
ராகுலை பிரதமராக ஏற்காதவர்களுடன் கூட்டணி எதற்கு? செல்வப்பெருந்தகை போர்க்கொடி!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பு...
ராகுல் காந்தியைப் பிரதமராக ஏற்காதவர்களுடன் எதற்கு கூட்டணி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
2029 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் முதல்வர் விஜய்தான் என்று தவெகவினரும், ராகுல் காந்திதான் என்று காங்கிரஸினரும் மாறிமாறிக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை பேசுகையில்,
“ராகுல் காந்திதான் பிரதமர் என்றால், அவர்தான் பிரதமர் என்று கூட்டணிக் கட்சிகள் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படியில்லை என்றால் இந்த கூட்டணியில் ஏன் இருக்க வேண்டும்?
ராகுல் காந்திதான் பிரதமர் என்று சபதம் ஏற்போம். அவரை பிரதமராக நேர்மையாக ஒப்புக் கொள்பவர்களுடன் கூட்டணி அமைப்பதுதான் நேர்மையாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மற்றும் மதிமுக கட்சிகள் இணைந்து தவெக தலைமையில் மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியை கடந்த வாரம் உருவாக்கினர்.
பிரதமர் வேட்பாளர் குறித்த சலசலப்பு நிலவி வந்த சூழலில், கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், “தமிழ்நாடு காங்கிரஸைப் பொறுத்தவரை ராகுல் காந்திதான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர். அதனை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். அதற்கான காலம் வரும்போது அனைவரும் வெளிப்படையாக அறிவிப்பார்கள்” என்று விளக்கம் அளித்திருந்தார்.
Why form an alliance with those who do not accept Rahul as Prime Minister? Selvaperunthagai
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.