Economy, business and finance
பேக்கரி கடையின் பூட்டை உடைத்து ரூ.42,000 திருட்டு
ப.வேலுார்:ப.வேலுார், கவுண்டம்பாளையம் - மோகனுார் செல்லும் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே, பேக்கரி நடத்தி வருபவர் ஜெயராம் மகன் சஞ்சய், 35; இவரது மனைவி ரஞ்சனி, 32; கடையின் அருகே வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு பேக்கரி கடையை திறக்க தம்பதியர் சென்றபோது, கடை திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த, 42,000 ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது.
ப.வேலுார் எஸ்.ஐ., சாந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
அப்பகுதியில், போலீசாரால் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா, கடந்த சில மாதங்களுக்கு முன் மணல் திருடர்களால் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் கண்காணிப்பு கேமராவிலிருந்து பதிவுகளை எடுக்கமுடியவில்லை.