Religion
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, நேற்று அதிகாலை முதல் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில், திர-ளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்-பட்டது. தர்மபுரி டவுன் பகுதியில் உள்ள சாலை விநாயகர் கோவிலில், அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்-பட்டு, கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, விநாயக-ருக்கு சந்தனம், பால், இளநீர், விபூதி, மஞ்சள், தயிர், தேன் உள்-ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. மஹா தீபாராத-னையை தொடர்ந்து, வெள்ளிக்கவச அலங்காரத்தில் விநாயகர் அருள் பாலித்தார். இதில், அதிகாலை முதல் பக்தர்கள் காத்தி-ருந்து, அருகம்புல், எருக்கம் பூ மாலை உள்ளிட்டவைகளை சுவா-மிக்கு சாற்றி வழிபட்டனர். விநாயகருக்கு கொளுகட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல் உளளிட்டவை படைத்தனர்.
அதேபோல், குமாரசாமிபேட்டை சிவசக்தி விநாயகர் வெள்ளி கவச அலங்காரத்திலும், செல்வகணபதி தங்கக்கவச அலங்காரம், பாப்பாரப்பட்டி ஏரிக்கரையில் உள்ள சித்தி விநாயகர் வெள்ளிக்க-வச அலங்காரம், கீழ்சவுளுபட்டி ராஜகணபதி ராஜ அலங்காரத்-திலும் அருள் பாலித்தனர். இதில், கோவிலுக்கு வந்த பக்தர்க-ளுக்கு விழா குழு சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், மாவட்டம் முழுவதும், 1,341 இடங்களில் விநாயகர் சிலைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டன. நகர பகுதி முதல் கிராமங்கள் வரை, அனைத்து இடங்களிலும் விநாயகர் சதுார்த்தி விழாவை, மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். * அரூர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள கோவில்களில், அதி-காலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சுவாமி தரி-சனம் செய்தனர். அதே போல், அரூரில், கீழ்பாட்சாபேட்டை விநாயகர் கோவில், வர்ணதீர்த்தம், பெரியார் நகர், கே.கே.நகர், கடைவீதி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில், விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மோப்பிரிப்பட்டி, சோரியம்பட்டி, கூக்கடப்-பட்டி, முத்தானுார், தீர்த்தமலை, மாம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு, அவற்றிற்கு சிறப்பு பூஜை செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்-பட்டது. அரூர் சப்-டிவிஷனில் மட்டும், 349 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, அரூர் கடைவீதியில் பூஜை பொருட்களின் விற்பனை ஜோராக நடந்தது. பூ, வாழைப்-பழம், பூமாலை உள்ளிட்டவைகளின் விலை, வழக்கத்தை விட அதிகமாக இருந்த போதிலும், அதை பொருட்படுத்தாமல் அவற்றை பொதுமக்கள் வாங்கிச்சென்றனர்.