Religion
விநாயகர் சதுர்த்தி உருவானது எப்படி தெரியுமா? புராணங்களும் வழிபாட்டு முறைகளும் இதோ!

உலகமெங்கும் வாழும் இந்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி உற்சாகமாகக் கொண்டாடப் படுகிறது. இந்நாளில் மண்ணினால் செய்த பிள்ளையாருக்கு பூஜைகள் செய்து கொழுக்கட்டை பிரசாதம் படைத்து வழிபடுவது ஐதீகம்.
விநாயகர் சதுர்த்தி என்றாலே களிமண்ணைக் கொண்டு பல வண்ணங்களுடன் உள்ள செய்யப்பட்ட விநாயகரும், அவருக்குப் படைக்கும் கொழுக்கட்டையும் தான் முதலில் நினைவுக்கு வரும். இந்துக்களின் முக்கிய விரத நாள்களாகவும் கடைப்பிடிக்கப்படும் இந்நாளுக்கு பின்னால் பல சுவாரஸ்யமான கதைகள் அடங்கியுள்ளது. முழுமுதற்கடவுளாகவும், ஈசனின் மகனுமான விநாயகரின் பிறந்த தினமான விநாயகர் சதுர்த்தியை ஏன் கொண்டாடுகிறோம்? இதன் வரலாறு என்ன? என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.
