வாஸ்து வாசகர் கேள்வி பதில்கள்! Ln.M. ஜெகநாதன் M.A.,B.Sc.,B.Ed.,

சுரேஷ், திண்டிவனம்.
திருமண பத்திரிக்கையில் நிகழும் மங்களகரமான பராப வருடம் என்று போடுகிறார்களா, இந்த மங்களகரமான என்பது சரியான சொல்லா விளக்கம் தாருங்கள்.
இது தவறாக அழைக்கப்படுகிறது மங்கலம் என்பதுதான் சரியான சொல். மங்கலம் என்றால் செழிப்பு புனிதம் சுபிட்சம் தூய்மை சிறப்பு மற்றும் நல்வாழ்வு என்று பெயர் மங்கல நாண் என்றால் தாலி என்று பெயர் மங்களம் என்பது மங்கலத்தின் போலிச் சொல் மங்களம் பாடினார். இசை கச்சேரியில் மங்களம் பாடினார். கதாகாலட்சேபத்தில் என்றால் கச்சேரி முடிந்துவிட்டது என்று பொருள். இது இப்படி இருக்க திருமண பத்திரிக்கையில் மங்களம் என்று ஆரம்பிக்கவேண்டும். திருமண வாழ்வு ஆரம்பிக்கவே இல்லை எப்படி மங்களம் பாடி முடிக்க முடியும். இது தவறுதலாக அழைக்கப்படுகிறது. எனவே மங்கலம் என்று பத்திரிக்கையில் அச்சடிப்பது தான் மிகவும் சரியான சொல் ஆனால் காலம் காலமாக மங்களம் என்றஇதே சொல்லை போட்டு பழக்கப்படுத்திவிட்டார்கள்.மொழி என்பது புரிந்து கொள்ளத்தானே என்று பழக்க தோஷத்தால் அச்சடித்த வருகிறார்கள். ஒருசில பேர் சரியாக அச்சடிக்கின்றனர் இது மிகக் குறைவு.மங்களம் என்று வந்துவிட்டது திருவள்ளுவர் மங்கலம் என்பனை மாட்சி மற்றும் அதன் நன்கலம் நன்மக்கள் பெயர் என்று எழுதுகிறார்.
ராமர், ஓகலூர்.
மனை அடி சாஸ்திரம் எதை பற்றி சொல்கிறது?
மனையடி சாஸ்திரம் வீட்டின் நீல அகலம் பற்றி பேசுகிறது. அறையினு டைய நீல அகலங்கள் கட்டடத்தின் உயரம் காம்பவுண்ட் சுவரின் உயரம் அகலம் பற்றி விரிவாக சொல்லப்படுவது தான் மனையடி சாஸ்திரம் கதவுகளின் எண்ணிக்கை உயரம் அகலம் ஜன்னல்களின் எண்ணிக்கை உயரம் நீளம் உரைப்பதுதான் மனையடி சாஸ்திரம்.
ராமகிருஷ்ணன், சின்னசேலம்.
என் வீட்டில் தேன் கூடு கட்டி உள்ளது பெரியதாக இருக்கிறது நல்லதா? கெட்டதா?
வீட்டினுள் அல்லது வெளியில் எங்கே தேன் கூடு கட்டினாலும் அது நல்லதல்ல அதில் உள்ள தேனீக்கள் குழந்தைகளையும் குடும்ப உறுப்பினர்களையும் கடிக்கும் வாய்ப்பு உண்டு பக்கத்து வீட்டுக்காரர்பாதிக்கப்படுவார் வீண்சண்டை வரும் பிரச்சனை வரும் எனவே வீட்டில் தேன் கூடுடுவரப்பது நல்லது அல்ல அதுவாக கூடுகட்டினாலும் அதற்குரிய நபர்களை வைத்து கலைத்து எடுக்க வேண்டும். வயலில் தோட்டத்தில் குழந்தைகள் மற்றவர்கள் போக த இடத்தில் கட்டினாலோ அல்லது நாம் கட்ட வைத்தாலோ முன் எச்சரிக்கையுடன்பார்த்துக் கொள்ளவது நல்லது.
கோவிந்தன், சீகூர்.
என் வீடு மேற்கு பார்த்து உள்ளது எல்லா திசையிலும் காலி இடம் உள்ளது எங்கு நான்ன் மாட்டுக்கு கொட்டகை கட்டலாம்.
மாட்டு கொட்டகை வடவேற்கு திசையில் கட்டுவது சாலச்சிறந்தது.
த. பார்த்திபன், ஆவிணங்குடி.
என் வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர் நான் குடி வந்ததிலிருந்து எங்களுடன் அடிக்கடி சண்டை வந்து கொண்டிருக்கிறது அவருக்கு பதிலுக்கு நான் வம்புகட்டபிரச்சனை தான் வருகிறது இதற்கு என்ன செய்யவேண்டும்.
உங்கள் வீட்டிலோ அல்லது அவர்களின் வீட்டில் ஏதேனும் வாஸ்து கோளாறு இருக்கிறதா என்று கவனியுங்கள் அதை சரி செய்யுங்கள் பொதுவாகவே ஒருவருக்கு மனைவிஅமைவதும் பக்கத்து வீட்டுக்காரர் அமைவதும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.கிருபானந்த வாரியார் தலைமையில் ஒரு திருமணத்தை நடத்தி வைத்தார் திருமணம் முடிந்ததும் ஆறு மாதம் கழித்து மணமகன் வாரியாருக்கு ஒரு கார்டு போட்டார் அதில் உங்கள் தலைமையில் திருமண நடந்தது தினமும் எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடிசண்டை வந்து கொண்டிருக்கிறது என்ன செய்வது என்று கேட்டார் அதற்கு பதிலாக வாரியார் சாமிகள் அடக்கி பார் என்றார் ஒரே வரிதான் ஆறு மாதம் கழித்து திரும்பவும் மணமகன்கடிதம் போட்டார் அடக்கி பார்த்தேன் ஒன்றும் முடியவில்லை என்றார் திரும்ப வாரியார் சுவாமிகள்பதில் அனுப்பினார் அடங்கிப்போ என்று அதன் பிறகு எந்த சண்டையும் வர இல்லை நிம்மதியாக வாழ்ந்தவர்கள் விட்டுகொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை கெட்டுப்போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை அனுசரித்துப் போனால் எல்லாம் சரியாகிவிடும் கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் அதாவது ஒடுகிற நாய்க்கும் இரைக்கும் அதை துரத்தும் நாய்க்கும் இரைக்கும் எனவே வாஸ்து நிபுனரை அழைத்து குறை தீர்த்து நலமாக வாழுங்கள் வளமாகவும் வாழுங்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)