Politics
வ.உ.சி., பிறந்தநாள் விழா
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம், சின்ன தேர் நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் கல்யாண மண்டபத்தில், இந்திய
சின்ன தேர் நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் கல்யாண மண்டபத்தில்,
இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.,யின், 155வது பிறந்தநாள் விழா
கொண்டாடப்பட்டது.
அதில், மாவீரர் சிதம்பரனார், இந்திய சுதந்திர
போராட்டத்தில் பங்கு கொண்டதையும், ஆங்கிலேயருக்கு எதிராக முதல்
முறையாக கப்பலோட்டி, இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததையும், அவர் தேச
நலனில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியதும், இந்திய சுதந்திர
போராட்டத்தில் ஈடுபட்டதையும் மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து,
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேனா, பென்சில், ரப்பர், நோட்டு
புத்தகம் உள்ளிட்ட பொருட்களை பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தலைவர் வருதராஜ்,
செயலாளர் பொன்னுமணி, பொருளாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
