Religion
கொடுக்கூர் கோவிலில் திருப்பணிகள் துவக்கம்
விருத்தாசலம்: கொடுக்கூர் வைத்தியநாத சுவாமி கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் பூமி பூஜையுடன் துவங்கியது.
விருத்தாசலம் அடுத்த கொடுக்கூர் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான தையல் நாயகி உடனுறை வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. மூன்று வேளைகளும் பூஜை நடந்து வரும் நிலையில் பராமரிப்பின்றி கோபுங்கள், மேற்கூரை, சுற்றுச்சுவர்கள் சேதமடைந்தன.
இதையடுத்து கிராம மக்கள் இணைந்து கும்பாபிேஷகம் செய்திட தீர்மானித்து, கடந்த மாத இறுதியில் ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர் சந்த் தலைமையில் பாலாலயம் செய்தனர். தொடர்ந்து, கும்பாபிேஷக திருப்பணிகள் நேற்று காலை பூமி பூஜையுடன் துவங்கியது.
விநாயகர், முருகன், அம்பாள், சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், பரிகார பூஜையுடன் திருப்பணிகள் துவங்கியது. ஓரிரு மாதங்களில் பணிகளை முடித்து, தருமபுரம் ஆதீனம் தலைமையில் கும்பாபிேஷகம் செய்திட தீர்மானிக்கப்பட்டது.