Lifestyle and human interest
ரூ.1.17 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட் டம், எளம்பலுாரில் நேற்று முன்தினம், வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த இரு கார்களில், மூட்டை மூட்டையாக கஞ்சா சிக்கியது.
இரு கார்களில் இருந்த ஆறு பேரை போலீசார் மடக்கினர். அப்போது, மூன்று பேர் தப்பினர். சென்னை, ஷெனாய் நகர் அருண்குமார், 31, உட்பட மூவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 1.17 கோடி ரூபாய் மதிப்பிலான, 235 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பிய மூவரை தேடி வருகின்றனர்.