Lifestyle and human interest
10 கிலோ கஞ்சா பறிமுதல்
கரும்புக்கடை: சாரமேடு ரோட்டிலுள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
சோதனையில் 10 கிலோ கஞ்சா சிக்கியது. அங்கிருந்த தாராபுரத்தை சேர்ந்த தற்போது காந்திபுரத்தில் வசிக்கும் சாகுல் ஹமீது, 45, ரத்தினபுரி, அருண் கார்டனை சேர்ந்த முபீனா, 46 அவரது மகன் முகமது ஜியாவுதீன், 24 ஆகியோரை கைது செய்தனர்.