Politics
கூடலுாரில் ரூ.70.9 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
கூடலுார்: கூடலுார் பாடந்துறையில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில், 50 பயனாளிகளுக்கு, 70.9 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூடலுார் பாடந்துறை திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்து மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார். 50 பயனாளிகளுக்கு 70.9 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். முகமில், பல்வேறு அரசு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
கூடலுார் வன அலுவலர் தேவராஜ், ஆர்.டி.ஓ., குணசேகரன், சமூக பாதுகாப்பு துறை துணை கலெக்டர் தீபாசித்ரா, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பாபு, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.