Politics
பாரத மாணவர் பேரவை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
பல்லடம், செப். 18– பல்லடத்தில், பாரத மாணவர் பேரவை சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 11 விநாயகர் சிலைகளின் விசர்ஜன
பல்லடத்தில், பாரத மாணவர் பேரவை சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 11 விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் நேற்று நடந்தது.
பேரவை தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். ஹிந்து பரிவார் கூட்டமைப்பு தலைவர் சாய் குமரன் முன்னிலை வகித்தார். சிறுவர்கள், குழந்தைகள் பலரும் கையடக்க விநாயகர் சிலைகளுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர். முன்னதாக, பல்லடம் என்.ஜி.ஆர். ரோட்டில் பொதுக்கூட்டத்துடன் விசர்ஜன ஊர்வலம் தொடங்கியது. மங்கலம் ரோடு வழியாக சென்ற ஊர்வலம், சாமளாபுரம் குளத்தை அடைந்ததும், விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.