Politics
விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
உடுமலை: ஹிந்து மக்கள் கட்சி(தமிழகம்) சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 23 விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் நேற்று நடந்தது.
ஊர்வலம் பெதப்பம்பட்டி நால்ரோட்டில் துவங்கி, உடுமலை நகரம் வழியாக மடத்துக்குளம் சென்றது. கட்சியின் மாநில செயலாளர் ரமணன் தலைமை வகித்தார்.
மாநில மகளிரணி தலைவர் நாகஜோதி வரவேற்றார். மாவட்ட தலைவர் பொன்னுசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் மணி முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தை அகில தந்திரி பிரசார சபா மாவட்ட செயலாளர் சரவணன் துவக்கி வைத்தார். மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. உடுமலை டி.எஸ்.பி., தையல்நாயகி தலைமையிலான போலீசார் ஊர்வலத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.