Religion
வரும் 17 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் இன்று தொடங்கியது.
இதனையொட்டி வடக்கு ஆடி வீதியில் 184 யாக குண்டங்கள், 56 யாகசாலைகள் அமைக்கப்பட்டும், கலசங்களில் புனித நீர் நிரப்புவதற்காக புண்ணிய நதியான கங்கையில் இருந்து 1,008 லிட்டர் புனித நீர் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.