Religion
கும்பாபிஷேகத்திற்கு செப்.16ல் குன்றத்து முருகன் புறப்பாடு
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் செப். 16ல் புறப்பாடாகிறார்.
உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் செப்.17ல் நடக்கிறது. இதில் பங்கேற்க திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் செப்.16 காலையில் புறப்பாடாகிறார். மறுநாள் செப். 17 ல் கும்பாபிஷேகம் முடிந்து இருவரும் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு திரும்புவர்.
வழக்கமாக மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணத்தில் பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பவள கனிவாய் பெருமாள் திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்பாடாவர். ஆவணி மூலத் திருவிழாவில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பங்கேற்பர்.
இந்தாண்டு கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக 3 வது முறையாக சுப்பிரமணிய சுவாமி திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்பாடாகிறார்.