Arts, culture, entertainment and media
அண்ணாதுரை பிறந்தநாள்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விருத்தாசலம் ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தத்தில் உள்ள அவரது சிலைக்கு, தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். சேர்மன் சங்கவி, இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோல், அ.தி.மு.க., நகர செயலாளர் ரமேஷ் தலைமையில் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. நகர தலைவர் தங்கராசு, மண்டல நிர்வாகி அருண் உட்பட பலர் பங்கேற்றனர்.
பண்ருட்டி;நகர அ.தி.மு.க.,சார்பில் நடந்த விழாவில் மாவட்ட செயலாளர் தாமோதரன், மோகன் எம்.எல்.ஏ., அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவை தலைவர் ராஜதுரை , முன்னாள் எம்.எல்.சி.,சிவராமன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி நகர தி.மு.க., வினர் தட்டாஞ்சாவடியில் இருந்து ஊர்வலமாக வந்து நான்கு முனை சந்தில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், மாவட்ட அவை தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன், துணை செயலாளர் ஆனந்தி், தணிகைசெல்வம உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.