மண்டல அளவிலான குறைதீர் நாள் புகார்கள் வரும், 7க்குள் அனுப்பணும்
பொள்ளாச்சி: ‘மண்டல அளவிலான குறைதீர்ககும் நாளில் குறைகள், புகார்களை வரும், 7ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்,’ என அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மண்டல அளவில் நடத்தப்படும் செப்., மாதத்துக்கான மக்கள் குறை தீர்க்கும் நாள், கோவை கே.பி., காலனி அஞ்சலக கட்டடம் மேற்கு மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் நடக்கிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
பொதுமக்கள் அனைவரும், அஞ்சல் சம்பந்தமான ஏதேனும் குறைகள், புகார்கள், அஞ்சல் ஆயுள் காப்பீடு சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின் புகார்களை, உதவி இயக்குனர், (Mails and Tech), அஞ்சல் துறை தலைவர், மேற்கு மண்டல அலுவலகம், கோவை, 641 0303 என்ற முகவரிக்கு வரும், 7ம் தேதிக்கு அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
அஞ்சல் உறையின் மேல், ‘DAK ADALAT CASE’ என்று எழுத வேண்டும். மணியார்டர், VPP, VPL, பதிவு தபால், விரைவு தபால், இன்சூர்டு (காப்பீடு தபால் பற்றிய புகார்கள் எனில் அனுப்பிய தேதி, முழு விலாசம் (அனுப்புநர், பெறுநர்), பதிவு அஞ்சல் எண், அலுவலகத்தின் பெயர் அனைத்தும் இடம் பெற்று இருக்க வேண்டும்.
சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றிய புகார்கள் என்றால் கணக்கு எண், பாலிசி எண், வைப்புத்தொகையாளர்களின் பெயர், வசூலிக்கப்பட்ட விபரங்கள் அல்லது வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் தெரிவிக்கலாம். என கோவை மேற்கு மண்டல அஞ்சல் அதிகாரிகள் தெரிவித்தனர்.