மண்டல தபால் துறை குறை கேட்பு கூட்டம்
ஈரோடு:கோவை அஞ்சல் மண்டலத்தின் மக்கள் குறை கேட்பு கூட்டம் செப்., மாதத்தில், அஞ்சல் துறை தலைவர் அலுவலகம்,
அஞ்சல் மண்டலத்தின் மக்கள் குறை கேட்பு கூட்டம் செப்., மாதத்தில்,
அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், மேற்கு மண்டலம், கே.பி.காலனி அஞ்சல்
அலுவலக வளாகம், கோவையில் நடக்கிறது.
குறை, கோரிக்கை கேட்டறியப்படும். புகார், மனு இருப்பின் தபாலில்
வரும், 7ம் தேதிக்குள், 'துணை இயக்குனர் (அஞ்சல் மற்றும் தொழில்
நுட்பம்), அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், மேற்கு மண்டலம், கோவை-641030'
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உறையின் மேற்பகுதியில், 'குறை
கேட்பு நாள் மனு' என குறிப்பிட வேண்டும்.
இத்தகவலை ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.