Arts, culture, entertainment and media
ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெருக்கடி
அனுப்பர்பாளையம், செப். 7– திருப்பூர் மாநகராட்சி, 15வது வார்டு அங்கேரிபாளையம் ரோட்டில் கடைக்காரர்கள் சாலையை
திருப்பூர் மாநகராட்சி, 15வது வார்டு அங்கேரிபாளையம் ரோட்டில் கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்து பொருட்களை வைத்துள்ளனர். ‘டாஸ்மாக்’ குடோன் அருகே சாலையை ஆக்கிரமித்து உணவகமும் செயல்படுகிறது. பள்ளி, பனியன் நிறுவனங்கள் நிறைந்த இப்பகுதியில் மாணவர்கள், தொழிலாளர்கள், வர்த்தக வாகனங்கள் அதிகம் செல்வதால், ஆக்கிரமிப்பால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.