Politics
நெய்வேலியில் 12ம் தேதி தி.மு.க., மாவட்ட செயற்குழு
சிறுபாக்கம்:கடலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் வரும் 12ம் தேதி நெய்வேலியில் நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் கணேசன் விடுத்துள்ள அறிக்கை:
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் சட்டசபை எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஆகியோர் உத்தரவின்படி, கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் 12ம் தேதி காலை 10:00 மணிக்கு நெய்வேலி தொ.மு.ச., அலுவலகத்தில் நடக்கிறது.
மாவட்ட அவைத் தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். அயலக அணி தலைவர் கலாநிதி வீராசாமி, அயலக அணி துணை செயலர் பரிதி இளம்சுருதி முன்னிலை வகிக்கின்றனர்.
கூட்டத்தில், ஒன்றிய, நகர, பேரூர் அமைப்புகள் மறுசீரமைப்பு மற்றும் கட்சி ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதில், மாவட்டத்திற்கு உட்பட்ட திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த, நகர, பேரூர், ஒன்றிய செயலாளர்கள், முன்னாள் இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.