Politics
விழுப்புரத்தில் நாளை தி.மு.க., செயற்குழு கூட்டம்
திருக்கோவிலுார்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நாளை நடக்கிறது.
தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி அறிக்கை:
கழக மறு சீரமைப்பு தொடர்பாக தலைவர் ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி வழிகாட்டுதலுடன், துணை பொதுச் செயலாளர் பொன்முடி ஆலோசனையின்படி, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை 6ம் தேதி மாலை 4:00 மணிக்கு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது.
மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, மாநில மகளிர் அணி பிரசார குழு செயலாளர் தேன்மொழி, தலைமைக் கழக வழக்கறிஞர் சுரேஷ், மாவட்ட துணைச் செயலாளர்கள் முருகன், கற்பகம் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில், புதுச்சேரி மாநில அமைப்பாளர் சிவா, மாநில மாணவர் அணி செயலாளர் வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஒன்றிய செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் தவறாது பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
