Politics
தொடர் விடுமுறை : 2,31,450 பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த 11-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சென்னையிலிருந்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகளின் மூலமாக சுமார் 2,31,450 எண்ணிக்கையிலான பொதுமக்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
