Politics
விநாயகர் சதுர்த்தி: ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விமானக் கட்டணம் ; பயணிகள் அதிர்ச்சி

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை காரணமாக, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட விமானங்களில், இன்று பயணக் கட்டணங்கள், பல மடங்கு உயர்ந்துள்ளது.
1விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து தூத்துக்குடி, கோவை, மதுரை, டெல்லி, மும்பை, பெங்களூரு செல்லும் விமானங்களின் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உயர்த்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்துக்களின் முக்கியமான பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 14ஆம் தேதி திங்கட்கிழமை நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விநாயகர் சதுர்த்தி விழா, இந்த ஆண்டு திங்கள் கிழமை வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள், தொடர் விடுமுறைகள் வருகின்றன.
இதையடுத்து பெரும்பாலானோர் சொந்த ஊர்களில், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கு, இன்று வெள்ளிக்கிழமையே புறப்பட்டு செல்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி வடமாநிலங்களிலும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுவதால், தமிழ்நாட்டில் வசிக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
அவ்வாறு செல்லும் பயணிகள் பெரும்பாலும் விமானங்களில் பயணிப்பதால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், பயணிகள் கூட்டம் பெருமளவு அலை மோதுகிறது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் விமானங்களில், விமானக் கட்டணங்கள் மூன்று மடங்கில் இருந்து, நான்கு மடங்கு வரையில், ராக்கெட் வேகத்தில் கடுமையான உயர்வு ஏற்பட்டுள்ளது. இது பயணிகளை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இவ்வாறு உள்நாட்டு விமானக் கட்டணங்கள், பல மடங்கு உயர்வு, பயணிகளை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இதையும் படிங்க: காரை நிறுத்தி வைத்தால் பேட்டரி காலியாகுமா? பலரும் செய்யும் தவறு என்ன தெரியுமா?
ஆனாலும் பயணிகள், தொடர் விடுமுறை நாட்களை, பயனுள்ளதாக சொந்த ஊர்களில் கழிக்க வேண்டும் என்பதற்காக, கூடுதல் கட்டணங்கள் செலுத்தி, விமானங்களில் பயணிக்கின்றனர்.
