Politics
அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் தீவிர சிகிச்சை மையம் திறப்பு
வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் மேம்படுத்தப்பட்ட புதிய தீவிர சிகிச்சை பிரிவு மையம் திறப்பு விழா நடந்தது.
வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி முதன்மை செயல்பாட்டு இயக்க அதிகாரி டாக்டர் வித்யா தலைமை தாங்கினார். மருத்துவ கல்லுாரி இயக்குனர் டாக்டர் ரத்தினசாமி, மருத்துவக் கல்லுாரி கண்காணிப்பாளர் ஜோசப் ராஜ் மற்றும் பொது மேலாளர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தனர்.
டாக்டர் சுரேஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் உதயசங்கர் பங்கேற்று கல்லுாரியில் மேம்படுத்தப்பட்ட புதிய தீவிர சிகிச்சை பிரிவு மையத்தை திறந்து வைத்து, புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இது போன்று தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்பதின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
வெங்கடேஸ்வரா மருத்துவனையில் புதிய தீவிர உயர் சிறப்பு சிகிச்சை மையம் இரண்டாம் தளத்தில் அமைந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய தீவிர சிகிச்சை மையத்தில் ஐ.ஐ.சி.யூ., ஐ.சி.சி.யூ., ஐ.ஆர்.சி.யூ., எஸ்.ஐ.சி.யூ., உள்ளிட்ட பிரிவுகள் உள்ளது.
டாக்டர் ராஜசேகர் நன்றி கூறினார்.