Politics
வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் புதிய தீவிர சிகிச்சை பிரிவு திறப்பு
வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை சேர்மன் ராமச்சந்திரன் வழிகாட்டுதலின்படி, வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட புதிய தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு, திறப்பு விழா நடந்தது.
விழாவில், டாக்டர் சுரேஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் உதயசங்கர் கலந்து கொண்டு மேம்படுத்தப்பட்ட புதிய தீவிர சிகிச்சை பிரிவு மையத்தினை திறந்து வைத்து, புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இது போன்று தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்பதின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
வெங்கடேஸ்வரா மருத்துவனையில் மேம்படுத்தப்பட்ட புதிய தீவிர சிகிச்சை பிரிவில் ஐ.ஐ.சி.யூ., ஐ.சி.சி.யூ., ஐ.ஆர்.சி.யூ., எஸ்.ஐ.சி.யூ., ஆகியவை உள்ளன. புதிதாக கட்டப்பட்டுள்ள உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விழாவில், முதன்மை செயல்பாட்டு அதிகாரி வித்யா, கல்லுாரி இயக்குனர் ரத்தினசாமி, மருத்துவக் கண்காணிப்பாளர் ஜோசப் ராஜ், பொது மேலாளர் சவுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டாக்டர் ராஜசேகர் நன்றி கூறினார்.