Education
யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தேர்வு
நாமக்கல்:யு.பி.எஸ்.சி., குடிமைப்பணி தேர்வு ஊக்கத்தொகை திட்டத்தின் படி, யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்வு, -2027க்கு

குடிமைப்பணி தேர்வு ஊக்கத்தொகை திட்டத்தின் படி, யு.பி.எஸ்.சி.,
முதல்நிலை தேர்வு, -2027க்கு தயாராகும் மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை
வழங்குவதற்கான மதிப்பீட்டு தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று
நடந்தது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தமிழகத்தை சேர்ந்த, 1,000
மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம், 7,500 ரூபாய் வீதம், 10
மாதங்களுக்கு வழங்கப்படும்.
பணியாளர் கல்லுாரியின் கீழ் இயங்கிவரும், அகில இந்திய
குடிமைப்பணிகள் பயிற்சி மையங்களுக்கான சேர்க்கையும், இந்த
மதிப்பீடு தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வில் பங்கேற்க, 307 பேர்
விண்ணப்பித்திருந்தனர். நேற்று காலை, 10:00 முதல், மதியம், 12:00 மணி
வரை நடந்த தேர்வில், 221 தேர்வர்கள் பங்கேற்றனர். 86 பேர்
கலந்துகொள்ளவில்லை.