Politics
வ.உ.சி., பிறந்தநாள் விழா
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை அருகே சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை படத்திற்கு
ராமநாதபுரம் அரண்மனை அருகே சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை படத்திற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் மலர்துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர். வெள்ளாளர் முன்னேற்றக் கழக நகர் தலைவர் சுந்தரராஜன், மாவட்ட செயலாளர் மனோஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் அஜித்குமார் ஏற்பாடுகளை செய்தார்.
* சாயல்குடி: சாயல்குடியில் வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பாக வ.உ.சி., பிறந்தநாள் விழா நடந்தது. உறவின்முறை தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். செயலாளரும், முன்னாள் ராணுவப்படை வீரர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். சாயல்குடி இளைய ஜமீன்தார் சக்கரவர்த்தி, சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் பங்கேற்றனர். பேச்சுப்போட்டி, நடனம் உள்ளிட்டவை நடந்தது.