Religion
பட்டத்தரசி கோவிலில் கும்பாபிேஷக விழா
சேவூர், செப். 18– மங்கரசு வலையபாளையத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பட்டத்தரசி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
மங்கரசு வலையபாளையத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பட்டத்தரசி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ செல்வவிநாயகர், கருப்பராயர், கன்னிமார் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முன்னதாக மஹா கணபதி ஹோமம், தீர்த்தக்குடம், முளைப்பாரி மற்றும் விமான கலச ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து யாக பூஜைகள், சர்வ காயத்ரி ஹோமம், கஜலட்சுமி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, விமான கலசம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்களுக்கு மஹா அலங்காரம், தீபாராதனை, கோ தரிசனம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.