Religion
பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி விழா
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் உருவம் பொறித்த பேனர்களை ஏந்தியபடி மாணவர்கள் வந்தனர். பக்தியுடன் பஜனை பாடல்கள் பாடி விநாயகப்பெருமானை மாணவர்கள் வணங்கினர்.
தொடர்ந்து, சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பள்ளி தாளாளர் மாரிமுத்து, பள்ளி செயலாளர் ரவிச்சந்திரன், முதல்வர் பிரகாஷ், பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* கோபாலபுரம் எம்.எம்.எஸ்., பள்ளியில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாணவர் ஒருவர் விநாயகர் போன்று வேடமணிந்து வந்தார். மேலும், விநாயகர் பாடல், நடனம், விநாயகர் சதுர்த்தி பிறந்த கதை குறித்து விளக்கப்பட்டன. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.
உடுமலை உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மழலையர் பிரிவு மாணவர்கள், விநாயகர், முருகன், சிவன், பார்வதி வேடமிட்டு வந்தனர்.
விநாயகர் சிலைக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாணவர்களின் ஆன்மிக கலை நிகழ்ச்சி நடந்தது. உடுமலை ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, செயலர் கார்த்திக்குமார், பள்ளி முதல்வர் மாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.