Sport
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஆசிய போட்டிகளிலிருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்ஷித் ராணா விலகியுள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அதன் பின், வருகிற செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் ஆசிய போட்டிகள் தொடங்குகின்றன. இதற்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஆசிய போட்டியிலிருந்து ஹர்ஷித் ராணா விலகியுள்ளார்.
Yash Thakur replaces Harshit Rana in Indiaâs T20Is squads for Afghanistan T20Is & Asian Games
More Details â¶ï¸ https://t.co/qh86ExSbgB #TeamIndia | #AFGvIND | #AsianGames
காயம் காரணமாக விலகியுள்ள ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக அணியில் வேகப் பந்துவீச்சாளர் யஷ் தாக்குர் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
27 வயதாகும் யஷ் தாக்குர் அண்மையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். அந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர், 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
சையத் முஸ்டாக் அலி தொடரில் இதுவரை 50 போட்டிகளில் விளையாடியுள்ள யஷ் தாக்குர், 81 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Indian all-rounder Harshit Rana has withdrawn from the T20 series against Afghanistan and the Asian Games.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.