நீலக்குறிஞ்சி பூக்களை ரசிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்

மூணாறு: மூணாறு அருகே சொக்கர்முடி மலையில் பூத்துள்ள நீலக்குறிஞ்சி பூக்களை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சொக்கர்முடியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்கள் மலை முழுதும் பூத்துள்ளன.
அவற்றை பார்வையிட ஆக. 24 முதல் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதித்து வருகின்றனர்.
தொடர் விடுமுறை என்பதால் நீலக்குறிஞ்சி பூக்களை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
கடந்த 3 நாட்களில் 9 ஆயிரம் பேர் குறிஞ்சி பூக்களை ரசித்துள்ளனர். பயணிகள் வருகை அதிகரித்ததால் ஆயிரம் பேர் வீதம் மலை மீது செல்ல அனுமதிக்கப் பட்டனர்.
இதனிடையே சென்னையில் உள்ள அமெரிக்கா துணை தூதரகத்தின் தலைமை துணை தூதர் மரியானா எல் நெய்சுலர் நீலக்குறிஞ்சி பூக்களை காண சொக்கர்முடி மலைக்கு வந்திருந்தார்.
அவர் குறிஞ்சி பூக்களை பார்த்து திரும்பு வரையில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப் படவில்லை.