Politics
திருத்தணி அரசு பள்ளி ஆசிரியர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
திருத்தணி, செப். 5– ஆசிரியர் தினமான இன்று, திருத்தணி அரசு பள்ளி ஆசிரியர் கோகுல்ராஜுக்கு, மாநில அளவிலான
ஆசிரியர் தினமான இன்று, திருத்தணி அரசு பள்ளி ஆசிரியர் கோகுல்ராஜுக்கு, மாநில அளவிலான நல்லாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது.
நாடு முழுதும், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் அந்த நாளில், மாநில அளவில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது எனும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், பெரியகடம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் கோகுலராஜ் என்பவர், 2026ம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு, சென்னையில் இன்று நடக்கும் ஆசிரியர் தின விழாவில், தமிழக கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்க உள்ளனர்.




/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
