Lifestyle and human interest
ஓட்டல்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
தேனி, செப்.11–தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு எதிரே 10க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், டீக்கடைகள் செயல்படுகின்றன.
அங்குள்ள ஓட்டல்களில் மாவட்ட உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் சசிதீபா தலைமையில் உணவுப்பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 3 கடைகள் கண்டறியப்பட்டன. இந்த கடைகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் வழங்கப்பட்டது. சமையல் கூடங்களை சீரமைத்து உணவு தயாரிக்கவும், சமைக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆண்டிபட்டி உணவுபாதுகாப்பு அலுவலர் இளங்கோவன் உடனிருந்தார்.