Lifestyle and human interest
குமாரபாளையம் ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு
குமாரபாளையம்:குமாரபாளையத்தில், மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள்
மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையில், உணவு பாதுகாப்பு
அலுவலர்கள் லோகநாதன், ரெங்கநாதன் அடங்கிய குழுவினர், குமாரபாளையம்
பகுதியில் உள்ள பல்வேறு உணவு நிறுவனங்களில் தீவிர தணிக்கை
மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, காலாவதியான தின்பண்டங்கள், உணவு
தயாரிக்க வைத்திருந்த செயற்கை நிறமூட்டிகள் மற்றும் அரசால் தடை
செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களும்
கைப்பற்றப்பட்டன. குறைபாடுகள் கண்டறியப்பட்ட சம்பந்தப்பட்ட
உணவு வணிகர்களுக்கு மேம்பாட்டு அறிவிப்புகள் வழங்கப்பட்டன.விதிமுறைகளை
பின்பற்றாத உணவுகளுக்கு, 30,000 ரூபாய் அபராதம்
விதிக்கப்பட்டது. மேலும், உணவு வணிகர்கள், உரிமம் அல்லது பதிவு
சான்றிதழை பொதுமக்கள் பார்க்கும் இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
பணியாளர்கள், 'பாஸ்டாக்' மற்றும் மருத்துவ தகுதி சான்று இருப்பதை
உறுதி செய்ய வேண்டும். தனிநபர் சுகாதாரம், தயாரிப்பு மற்றும் சமையலறை
பராமரிப்பு நடைமுறைகளை பின்பற்றவும். பயன்படுத்திய சமையல்
எண்ணெயை மீண்டும் பயன்படுத்தாமல் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,-ஆல்
அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பாளர்களிடம் ஒப்படைக்கவும், தரமான
உபகரணங்கள் பயன்படுத்தவும், பூச்சி கட்டுப்பாடு நடவடிக்கைகளை
மேற்கொள்ளவும், குடிநீர் மற்றும் உணவு பொருட்களை ஆய்வக பரிசோதனைக்கு
உட்படுத்தி தரம் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும்
அறிவுறுத்தப்பட்டது.