Education
தமிழக அரசின் சார்பில் 396 ஆசிரியர்களுக்கு விருது
சென்னை: ஆசிரியர் தினத்தையொ ட்டி, கல்வியில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய, 396 ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பள்ளிக்கல்வியில், சிறப்பான பங்களிப்பை வழங்கும் ஆசிரியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர் தினத்தையொட்டி, தமிழக அரசின் சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலக கலையரங்கத்தில் நேற்று நடந்தது.
விழாவில், பள்ளிக்கல்வி, 171 ஆசிரியர்கள்; தொடக்கக்கல்வி, 171 ஆசிரியர்கள்; தனியார் பள்ளியில், 38; ஆங்கிலோ இந்திய பள்ளிகள், 2; சமூக பாதுகாப்பு துறை பள்ளிகள், 2; மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் இருவர்; மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 10 என, மொத்தம் 396 ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
விழாவில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:
உலகிலேயே எவ்வித பொறாமையும் இல்லாத குணம் கொண்டவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் மாணவர்கள் நலனை பார்த்துக் கொள்ள வேண்டும், நாங்கள் ஆசிரியர்கள் நலனை காக்க, உயிரை கொடுத்து முயற்சி செய்வோம். தமிழக அரசின் சார்பில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, 'டி.என்.அறிவு' திட்டம், இந்தியாவுக்கே முன்மாதிரியான திட்டமாக மாற வேண்டும். அதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.