ஏரியை துார் வாரும் பணி தொடக்கம்
மதுராந்தகம், செப். 5-– மதுராந்தகம் ஏரியை துார் வாரும் பணியை செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் கொடியசைத்து,
மதுராந்தகம் ஏரியை துார் வாரும் பணியை செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் கொடியசைத்து, நேற்று தொடங்கி வைத்தார்.
மதுராந்தகத்தில் உள்ள ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 2,500 ஏக்கர் ஆகும். ஏரியின் முழு கொள்ளளவு 25 அடி ஆகும்.
ஐந்து மதகுகள் வழியாக 4,000 ஏக்கர் விவசாய நிலங்களும், மேல்மட்ட கால்வாய் வழியாக 30 ஏரிகளுக்கு நீர் கொண்டு சென்று, அதிலிருந்து 3,000 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 7,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மதுராந்தகம் ஏரியை துார்வாரி ஆழப்படுத்துதல், கொள்ளளவை உயர்த்துதல் மற்றும் ஏரியின் கலங்கல்களை கதவணையுடன் கூடிய உபரி நீர் போக்கி கட்டமைக்கும் பணிகளுக்காக 160 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்பின், ஏரி சீரமைப்பு பணி, 2022ல் தொடங்கி மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது. ஆனால், முறையாக செயல்படுத்தவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், மதுராந்தகம் ஏரியில் தண்ணீர் அதிக அளவு தேக்கம் செய்யும் வகையில், ஏரியில் படிந்துள்ள வண்டல் மண்களை துார்வாரி சீரமைக்க கலெக்டர் வீரப்பனிடம் விவசாயிகள் மனு அளித்தனர். அதன்படி பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் வாயிலாக, துார்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இப்பணியை, செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் நேற்று, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ் குமார், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் நரேந்திரன், தாசில்தார் பெருமாள், நீர்வளத்துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.