மனைவி மாயம் கணவர் புகார்
விழுப்புரம்: மனைவியை காணவில்லை என கணவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுத்தனுார் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் மனைவி கிருஸ்டினா லியோனி(எ)அம்மு,31;
இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அம்மு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் கடந்த 5 மாதங்களாக பணிபுரிந்தார். கடந்த 7 ம் தேதி, கடையில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வரவில்லை. ஆரோக்கியராஜ் புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து பெண்ணை தேடி வருகின்றனர்.