மனைவி மாயம் கணவர் புகார்
விழுப்புரம்: பஸ் நிலையத்தில் மனைவி காணாமல் போனதாக கணவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், அம்பர்நாத் பகுதியை சேர்ந்தவர் கோபி மகன் கோவிந்தராஜ்,28; இவரின், சொந்த ஊர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அருகே ஆர்.ஆர்.குப்பம் பகுதியாகும்.
அவரது மனைவி காயத்ரி,25; இந்த தம்பதிக்கு, திருமணமாகி, 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லை. இந்நிலையில் இருவரும் கடந்த, 7 ம் தேதி உளுந்துார்பேட்டைக்கு வந்தனர்.
பின், மீண்டும் கோவிந்தராஜ் தனது மனைவியோடு மகராஷ்டிரா செல்ல, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து காயத்ரியை ஓரமாக நிற்க வைத்து விட்டு ஆட்டோவை அழைத்து வர சென்றார். மீண்டும் வந்து பார்த்த போது காயத்ரியை காணவில்லை. பல இடங்களில் அவர் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. கோவிந்தராஜ் புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து காயத்ரியை தேடி வருகின்றனர்.